விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

arvloshan.com

இந்தியாவின் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் துறையை வலுப்படுத்தவும், சர்வதேச சந்தைகளில் அதன் பங்களிப்பை அதிகரிக்கவும் 18.56 பில்லியன் இந்திய ரூபாய் (சுமார் 195 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான திட்டத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) அறிவிப்பின்படி, **'கேலோ இந்தியா விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திட்டம்' (Khelo India Sports Goods Manufacturing Scheme)** 2026ஆம் ஆண்டு முதல் 2033–2034ஆம் நிதியாண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல், உற்பத்திப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் கீழ், விளையாட்டுப் பொருட்கள் உற்பத்திக்கான பிரத்யேக வலயங்களை உருவாக்குவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தமது உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கும் ஊக்குவிக்கப்படவுள்ளன.

மேலும், சிறிய, குறுந்தொழில் மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களை (MSMEs) உள்ளடக்கிய தற்போதைய உற்பத்தி மையங்களை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், முதலீடு மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புகளுக்காக 11.3 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளின் தரச்சான்றிதழ்களைப் பெறுவதற்கும் அவற்றைப் புதுப்பிப்பதற்கும் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் 1.05 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள், புதிய தொழில் முயற்சிகள் மற்றும் தொழிற்துறையுடன் தொடர்புடைய திறன் பயிற்சிகள் ஆகியவற்றையும் இத்திட்டம் ஊக்குவிக்கவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் துறையின் போட்டித்திறனை அதிகரித்து, சர்வதேச சந்தையில் இந்தியப் பொருட்களின் இருப்பை விரிவுபடுத்துவதை அந்நாட்டு அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தமிழ்நாடு சிறையில் வலிப்பு வந்ததாக நாடகமாடி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்!

...

arvoshan.com

சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!

...

arvoshan.com

பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை – வேதங்கள், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்

...

arvoshan.com

மியான்மர் ஆயுதப் பயிற்சி வழக்கு: வான்டைக் உள்ளிட்ட 7 பேருக்கு வெளிநாட்டில் தங்க அனுமதி நீடிப்பு

...

arvoshan.com

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாகும் புதிய திட்டம்!

...

arvoshan.com

நிர்வாகிகள் கைது: தவெக அரசைக் கண்டித்து அக். 24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்!

...

arvoshan.com

ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை

...

arvoshan.com

ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? – இந்தியா புதிய முன்மொழிவு

...

arvoshan.com

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்: திமுக பெண் கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

...

arvoshan.com

தாராபுரம் தொகுதிக்கு ரூ.1,439 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்! – முதல்வர் விஜய் அறிவிப்பு

...

arvoshan.com

நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு – நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!

...

arvoshan.com

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையும் எரிக்கத் திட்டம்!

...

arvoshan.com

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் – வயது 75

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்! விஜய்யின் TVK கட்சி நிர்வாகி இந்தியாவில் கைது

...

arvoshan.com

கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட பெண்கள்

...