விபரங்களின்றி டயப்பர் விற்பனை: இரு நிறுவனங்களுக்கு ரூ. 110,000 அபராதம்!

arvloshan.com

சட்டப்பூர்வமாக தேவைப்படும் இறக்குமதியாளர் விபரங்கள் இன்றி, குழந்தைகளுக்கான டயப்பர்களை (Baby Diapers) மொத்த விற்பனை செய்து வந்த இரண்டு நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் 110,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தெஹிவளை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையினையடுத்தே இன்று (23) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தெஹிவளை, கேம்பல் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள 'குளோபல் கமோடிட்டி சொல்யூஷன்' நிறுவனத்திற்கு 100,000 ரூபாயும், தெமட்டகொட, கெட்டவலமுல்ல பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள 'ஹால்மார்க் இண்டஸ்ட்ரி' நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிறுவனங்கள் இரண்டும் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தையில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் கிழிந்து சேதமடைவது குறித்து நுகர்வோரிடமிருந்து கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, இலக்கம் 85 இன் கீழ் வெளியிடப்பட்ட கட்டளையின் படி தேவையான இறக்குமதியாளரின் விபரங்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட டயப்பர்கள் விநியோகிக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.

குறிப்பாக, பொதிகளில் பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அல்லது இணையத்தள விபரங்கள் போன்ற அத்தியாவசியத் தகவல்கள் எதுவும் அச்சிடப்பட்டிருக்கவில்லை என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த டயப்பர் கையிருப்புகள் வழக்குப்பொருட்களாகக் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து, குழந்தைகளின் மென்மையான தோலுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் டயப்பர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, அவற்றின் லேபிள்களை கவனமாகப் பரிசீலிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, உறைகளில் பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரின் விபரங்கள் மற்றும் அதிகபட்ச சில்லறை விலை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நுகர்வோருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், அதற்குப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பதற்கு இந்த விபரங்கள் அத்தியாவசியமானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சட்டப்பூர்வ விபரங்களுடன் சந்தைப்படுத்தப்படுவதை வர்த்தகர்களும் விநியோகஸ்தர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் இடம்பெறும் இத்தகைய அநீதிகள் அல்லது முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...