வல்வெட்டித்துறையில் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

arvloshan.com

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் இன்றைய தினமாகும். 

அதனை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு , இன்றைய தினம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

இரண்டு கேக்கள் வெட்டப்பட்டு , அங்கு வந்திருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது, அத்துடன் எள்ளு பாகு , சொக்லேட் என்பவையும் வழங்கப்பட்டது. 

அதேவேளை , பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்  , மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது. 

கடந்த காலங்களில் பிறந்தநாளை மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , புலிகளின் தலைவரின் பூர்வீக வீடு அமைந்துள்ள குறித்த காணியின் மதிலில் "தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லம்" என பதாகையும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. 

முன்னர் கட்டப்பட்டிருந்த பதாகை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்ட நிலையில் புதிய பதாகை கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

...

arvoshan.com

சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

...

arvoshan.com

கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...

arvoshan.com

சுப்ரீம் SAT செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை!

...

arvoshan.com

குற்றக் கும்பலுக்கு ரி-56 துப்பாக்கியை விற்றதாகக் குற்றச்சாட்டு – டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

...

arvoshan.com

நெடுந்தீவின் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!

...

arvoshan.com

பிரித்தானியாவால் ஆபிரிக்க நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிரிழப்பு – இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை

...

arvoshan.com

யாழில். 50 மதுபான போத்தலுடன் ஒருவர் கைது

...

arvoshan.com

பாடசாலை மாணவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய மாதிரிச் சந்தை – அரசாங்கம் திட்டம்

...