நெடுந்தீவின் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!

arvloshan.com

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடல் மார்க்கமாக எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இரண்டு எரிபொருள் பௌசர் வாகனங்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கப்பல் மூலம் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இதுவரை நெடுந்தீவில் நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால், அப்பகுதி மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் அதிக போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், அரசாங்கத்தினால் நெடுந்தீவில் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கான ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறையின் அபிவிருத்திப் பணிகளின்போது கைச்சாத்திடப்பட்டது. தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் உள்ளிட்ட தீவின் அனைத்துத் தரப்பு மக்களும் இலகுவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அவசர மருத்துவ சேவைகளை முன்னெடுத்தல், மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் தீவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த நிலையம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகாலமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்த நெடுந்தீவு மக்கள், இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ளதுடன், தமது பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்த அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

...

arvoshan.com

சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

...

arvoshan.com

கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...

arvoshan.com

சுப்ரீம் SAT செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை!

...

arvoshan.com

குற்றக் கும்பலுக்கு ரி-56 துப்பாக்கியை விற்றதாகக் குற்றச்சாட்டு – டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

...

arvoshan.com

பிரித்தானியாவால் ஆபிரிக்க நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிரிழப்பு – இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை

...

arvoshan.com

வல்வெட்டித்துறையில் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

...

arvoshan.com

யாழில். 50 மதுபான போத்தலுடன் ஒருவர் கைது

...

arvoshan.com

பாடசாலை மாணவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய மாதிரிச் சந்தை – அரசாங்கம் திட்டம்

...