போலி வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் AI கருவி மூலம் Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் திருட்டு!

arvloshan.com

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சி சொத்துக்களைத் திருடுவதற்கு ஹேக்கர்கள் போலியான வேலைவாய்ப்பு நேர்காணல்களையும், ஊடுருவப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கருவியையும் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Binance நிறுவனத்தின் தகவலின்படி, நிறுவனத்தின் பொறியியலாளர் ஒருவரை முறையான வேலைவாய்ப்புத் தளத்தின் ஊடாக ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். தங்களை நிறுவனத்தின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்திக்கொண்ட அவர்கள், அவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது நேர்காணலின்போது, வேலைவாய்ப்புத் தொடர்பான பணிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கோப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு அந்தப் பொறியியலாளரிடம் கோரப்பட்டுள்ளது.

எனினும், அந்தக் கோப்பில் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனைப் பதிவிறக்கம் செய்ததன் மூலம் பொறியியலாளரின் கணினியை ஹேக்கர்கள் இரகசியமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஊடுருவப்பட்ட கணினியையும் நிறுவனத்தின் உள்நாட்டு AI கருவியையும் பயன்படுத்தி மேலும் இரண்டு பொறியியலாளர்களின் மடிக்கணினிகளையும் ஹேக்கர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன் மூலம், பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சிகளைப் பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கணினி அமைப்புகளுக்குள் அவர்கள் ஊடுருவியுள்ளனர்.

இந்தச் சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களுக்கான பணம் மீளப்பெறும் சேவையை Binance நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுடன் வடகொரிய ஹேக்கர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்க விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டை வடகொரியா நிராகரித்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ள Binance நிறுவனம், திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கும், தனது பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

நினைவகச் சிப் விலை உயர்வு; ஆப்பிள் பங்குகள் 4% சரிவு – லாப வரம்பு குறையும் என புதிய தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!

...

arvoshan.com

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள் – இஸ்ரோ அறிவிப்பு

...

arvoshan.com

ChatGPT ஆலோசனையால் வலிப்பு நோய்க்கான மருந்தை நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு – OpenAI நிறுவனத்துக்கு எதிராக பெற்றோர் வழக்குத் தாக்கல்

...

arvoshan.com

AI தொழில்நுட்ப வளர்ச்சி: மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் 60,000 ஊழியர்களுக்கு தன்னார்வ விலகல் திட்டம்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு விரிவாக்கத்திற்காக 3,500 கோடி டொலர் பங்கு வெளியீடு – மெட்டா அறிவிப்பு

...

arvoshan.com

பொறியியல் படிக்காமலேயே பறக்கும் காரை உருவாக்கி அசத்திய இளைஞர்!

...

arvoshan.com

அரச நிறுவனங்களுக்கு அவசர சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

இணையம் வழியாக வாசனைகளைப் பரிமாறும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

இணையத்தள உரிமையாளர்களுக்கு இலங்கை CERT முக்கிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

ஹோட்டல் முன்பதிவு பாதுகாப்பானதா? Booking.com நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!

...

arvoshan.com

உலகம் முழுவதும் அரச மற்றும் வர்த்தக இணையத்தளங்கள் முடக்கம்! PHP மென்பொருளில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடு

...

arvoshan.com

செவ்வாய் கிரகத்தின் மர்ம நிலவுகளை ஆய்வு செய்ய ஜப்பானின் புதிய விண்வெளித் திட்டம்!

...

arvoshan.com

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி AI உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டம்!

...

arvoshan.com

பறக்கும் திறன் கொண்ட புதிய டெஸ்லா ரோட்ஸ்டரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

...

arvoshan.com

ஆப்பிள் மீது OpenAI வர்த்தக இரகசியக் குற்றச்சாட்டு!

...