பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமறியலை மேலும் நீடிக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, பிள்ளையானை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.