பொருளாதார மீட்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடன்!

arvloshan.com

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடவுள்ளது.

இதற்கான முறையான கடன் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடன் ஒப்பந்தங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியானது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன்படி, 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்கை அடிப்படையிலான கடனாகவும், ஏனைய 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டு நிதியுதவியாகவும் வழங்கப்படவுள்ளன. இந்த நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்களின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

பொருளாதார மீட்சி மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.

குறிப்பாக, நெகிழ்திறன் கொண்டதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான பேரினப் பொருளாதார மீட்சி துறை அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

முன்மொழியப்பட்ட நிதியுதவி தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் முறையான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, குறித்த பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்வதற்கு 2026 செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, ஐந்து உப வேலைத்திட்டங்களின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 620 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் 2026 மார்ச் 16ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்களுக்குத் துணைபுரிவதும் இந்த நிதியுதவி ஏற்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

...

arvoshan.com

வனவிலங்கு இறைச்சி விவகாரம்: ஜய ஸ்ரீ மகா போதியின் பிரதம கபுராளருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு

...

arvoshan.com

அர்னாப் புயலின் தாக்கம் நாளை முதல் குறையும்! பல மாகாணங்களில் மழை; 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம்

...

arvoshan.com

விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வனவிலங்குகள் – புதிய தேசியக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

...

arvoshan.com

தென் கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு – இலங்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

...

arvoshan.com

மகாவலி நீர்ப்பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடு!

...

arvoshan.com

சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்கு ஆபத்து ! புதிய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டம்

...

arvoshan.com

பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம்: பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

...

arvoshan.com

ஏர்பஸ் ஒப்பந்தம்: நாமல் ராஜபக்ஷ நாளை ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் முன்னிலை

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: சுயாதீன விசாரணைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

...

arvoshan.com

இலங்கையுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் – பிரேசில் ஜனாதிபதி லூலா

...

arvoshan.com

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

ஆபிரிக்க ஒன்றியத்துக்கான இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதி!

...

arvoshan.com

மன்னாரில் வெள்ளம்: 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

...