ஏர்பஸ் ஒப்பந்தம்: நாமல் ராஜபக்ஷ நாளை ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் முன்னிலை

arvloshan.com

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, நாளை (28) கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (27) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமல் ராஜபக்ஷவை நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

ஏர்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, பிரதம சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதம நீதியரசரின் அனுமதியுடன் குறித்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

மேலும், குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 59 சாட்சியாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான இறுதி விசாரணையாக இன்றைய நடவடிக்கைகள் அமையும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

...

arvoshan.com

வனவிலங்கு இறைச்சி விவகாரம்: ஜய ஸ்ரீ மகா போதியின் பிரதம கபுராளருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு

...

arvoshan.com

அர்னாப் புயலின் தாக்கம் நாளை முதல் குறையும்! பல மாகாணங்களில் மழை; 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம்

...

arvoshan.com

விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வனவிலங்குகள் – புதிய தேசியக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

...

arvoshan.com

தென் கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு – இலங்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

...

arvoshan.com

மகாவலி நீர்ப்பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

பொருளாதார மீட்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடன்!

...

arvoshan.com

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடு!

...

arvoshan.com

சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்கு ஆபத்து ! புதிய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டம்

...

arvoshan.com

பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம்: பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: சுயாதீன விசாரணைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

...

arvoshan.com

இலங்கையுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் – பிரேசில் ஜனாதிபதி லூலா

...

arvoshan.com

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

ஆபிரிக்க ஒன்றியத்துக்கான இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதி!

...

arvoshan.com

மன்னாரில் வெள்ளம்: 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

...