ஆபிரிக்க ஒன்றியத்துக்கான இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதி!

arvloshan.com

ஆபிரிக்க ஒன்றியத்துக்கான இலங்கையின் தூதுவர் நிர்மலா பரணவிதான, ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் மஹ்மூத் அலி யூசுப் அவர்களிடம் தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளார்.

இதன் மூலம், ஆபிரிக்க ஒன்றியத்துக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் முதலாவது இலங்கைப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் தகவலின்படி, நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, தெற்கு–தெற்கு ஒத்துழைப்பை (South–South Cooperation) மேம்படுத்துவதன் ஊடாக இருதரப்புக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் இடையில் விரிவான கூட்டாண்மை கட்டமைப்பொன்றை (Partnership Framework) உருவாக்குவதற்கு நிர்மலா பரணவிதான முன்மொழிந்துள்ளார்.

இந்தக் கட்டமைப்பின் கீழ், முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய துறைகளை அடையாளம் காண்பதற்கும், நடைமுறை ஒத்துழைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை (MoU) ஏற்படுத்துவதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த முன்மொழிவை வரவேற்ற ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர், புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை முன்னெடுப்பதிலும், இருதரப்பினரும் இணைந்து செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான கூட்டாண்மைகளை அடையாளம் காண்பதிலும் ஆர்வம் வெளியிட்டுள்ளார்.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, இளைஞர் வலுவூட்டல், டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி, காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்துதல், நீர்வள முகாமைத்துவம் மற்றும் நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், தொழில்நுட்பப் பரிமாற்றம், தொழில்முனைவோர் மேம்பாடு, முதலீடு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டுள்ளன.

விவசாயம், தொழில்நுட்பம், நீர்வள முகாமைத்துவம் மற்றும் மோதலுக்குப் பின்னரான நல்லிணக்கம் ஆகிய துறைகளில் இலங்கைக்குள்ள நிபுணத்துவத்தை ஆபிரிக்க நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக நிர்மலா பரணவிதான தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாய ஆராய்ச்சிக் கூட்டாண்மைகள், டிஜிட்டல் புத்தாக்கம், இளைஞர் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் தெற்காசிய, ஆபிரிக்க நிறுவனங்களுக்கு இடையிலான பிராந்திய மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துவதிலும் அவர் ஆர்வம் வெளியிட்டுள்ளார்.

ஆபிரிக்காவின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் 'அஜெண்டா 2063' (Agenda 2063) திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நடைமுறைச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும் இருதரப்பினரும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தூதுவர் நிர்மலா பரணவிதான சர்வதேச சட்டம், பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் இடைக்கால நீதித்துறை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இராஜதந்திரியாவார்.

2024ஆம் ஆண்டில், ஹேக் சர்வதேச சட்டக் கல்விக்கழகத்தின் (The Hague Academy of International Law) ஐக்கிய நாடுகள் சட்டப் புலமைப்பரிசில் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர், இதற்கு முன்னர் நியூயோர்க், புதுடில்லி, மியன்மார், டோக்கியோ மற்றும் சுவீடன் ஆகிய இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (Australian National University) தத்துவ முதுகலைப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

...

arvoshan.com

வனவிலங்கு இறைச்சி விவகாரம்: ஜய ஸ்ரீ மகா போதியின் பிரதம கபுராளருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு

...

arvoshan.com

அர்னாப் புயலின் தாக்கம் நாளை முதல் குறையும்! பல மாகாணங்களில் மழை; 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம்

...

arvoshan.com

விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வனவிலங்குகள் – புதிய தேசியக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

...

arvoshan.com

தென் கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு – இலங்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

...

arvoshan.com

மகாவலி நீர்ப்பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

பொருளாதார மீட்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடன்!

...

arvoshan.com

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடு!

...

arvoshan.com

சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்கு ஆபத்து ! புதிய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டம்

...

arvoshan.com

பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம்: பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

...

arvoshan.com

ஏர்பஸ் ஒப்பந்தம்: நாமல் ராஜபக்ஷ நாளை ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் முன்னிலை

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: சுயாதீன விசாரணைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

...

arvoshan.com

இலங்கையுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் – பிரேசில் ஜனாதிபதி லூலா

...

arvoshan.com

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

மன்னாரில் வெள்ளம்: 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

...