நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது
கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபாவை லஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த 70 மில்லியன் ரூபா பணத்தை, மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்சவுக்கு ஜானகி சிறிவர்தன வழங்கியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.