தெனியாயவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் உயிரிழப்பு: திருமணமாகி 17 நாட்களே ஆன இளைஞரும் பலி
தெனியாயவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் உயிரிழப்பு: திருமணமாகி 17 நாட்களே ஆன இளைஞரும் பலி
தெனியாய பிரதேசத்தில் உள்ள நீரூற்றுப் பகுதியில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரின் சடலங்களும், நீண்ட தேடுதலுக்குப் பின்னர் நேற்று (8) மாலை மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 34 வயதான பிஷான் பிரபாத்வர என அடையாளம் காணப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற அவர், கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட அவர், திருமணமாகி 17 நாட்களிலேயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.