திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

arvloshan.com

கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான முன்னுரிமைத் தொழில் பிரிவுகளை கனடா அறிவித்துள்ளது.

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Express Entry குடிவரவு முறைமையின் ஊடாக பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பணியாற்றுவோர் மற்றும் போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள் முன்னுரிமைப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கனடாவில் பணி அனுபவம் கொண்ட மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றவர்களும் Express Entry முறைமையின் கீழ் முன்னுரிமை பெறும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய பொருளாதாரத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கு மேலதிகமாகத் திறமையான நிபுணர்களை இணைத்துக்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என IRCC தெரிவித்துள்ளது.

Express Entry என்பது கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற விரும்பும் திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களின் குடிவரவு விண்ணப்பங்களை நிர்வகிக்கும் முறைமையாகும்.

இதன் கீழ், குறிப்பிட்ட தகைமைகள், தொழில் அனுபவம் மற்றும் மொழித் திறன்களைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு, பிரிவு அடிப்படையிலான அழைப்புகள் மூலம் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு கனடாவில் குடியேற விரும்பும் இலங்கைத் திறமையான தொழில் வல்லுநர்களுக்கும் முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. எனினும், விண்ணப்பதாரர்கள் கனடாவின் குடிவரவு விதிமுறைகள் மற்றும் தகைமை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது அவசியமாகும்.

Express Entry மற்றும் முன்னுரிமைத் தொழில் பிரிவுகள் தொடர்பான மேலதிக விபரங்களை கனடாவின் உத்தியோகபூர்வ குடிவரவு இணையத்தளமான IRCC ஊடாக அறிந்துகொள்ள முடியும்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

...

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

...

arvoshan.com

இரண்டு நாட்களில் 2,200க்கும் மேற்பட்ட குடியேறிகள் கேனரி தீவுகளை வந்தடைந்தனர்!

...

arvoshan.com

நைஜீரியாவில் 33.95 கிலோ கஞ்சாவுடன் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கைது!

...

arvoshan.com

சீனப் போட்டியால் நெருக்கடியில் ஜாகுவார்; 4,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

...

arvoshan.com

டிக்டொக் காணொளி படப்பிடிப்பின்போது வனவிலங்கு தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் இருவர் கைது

...

arvoshan.com

அமெரிக்காவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு – 30க்கும் மேற்பட்டோர் காயம்!

...

arvoshan.com

அமெரிக்க வான்பரப்பில் நான்கு மணி நேரப் பெரும் குழப்பம் – என்ன நடந்தது?

...

arvoshan.com

ரஷ்யாவில் தொடர் குண்டுவெடிப்புகள்: இராணுவ அதிகாரி பலி; உக்ரைன் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் படுகாயம்

...

arvoshan.com

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறைக்குத் தடை – நியூயோர்க்

...

arvoshan.com

டைட்டானிக்கை விட நீளமான கப்பல் கடலில் மூழ்கடிப்பு! உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாற்றம்

...