தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்
தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இரத்ததான முகாமொன்று இன்றையதினம் நடத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் உயரிய தியாகத்தை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இக்கொடைச் செயல்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், திரளான பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.