தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்
தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமான நடிகர் ராம் நிதின், புதிய திரைப்படம் ஒன்றின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் ஜெய் பழனி இயக்கும் இத்திரைப்படத்தில் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ‘மேட்’, ‘மேட் ஸ்குயர்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற இவர், தற்போது தமிழிலும் அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தில் பிரார்த்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்தின் கே.எஸ்.சினிஷ், ரெடாக்டட் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கின்றனர்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படம், பல்வேறு வர்த்தக அம்சங்களுடன் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.