அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் விஜய் – ரஜினிகாந்த் சந்திப்பு!
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.
வழக்கமான வேட்டி, சட்டை அல்லது கோட் சூட் உடைகளைத் தவிர்த்து, வித்தியாசமான உடையில் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவரது தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டதாக வெளியாகியுள்ள இந்தக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மேலும், ரஜினிகாந்த், விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி கிரீஸ் நாட்டில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அப்போது அரச பணிகள் காரணமாகத் திருமணத்தில் பங்கேற்க முடியாத முதலமைச்சர் விஜய், சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
முன்னதாக, விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.