ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு ஒக்டோபர் 28 இல் மீண்டும் விசாரணை
சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனமொன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பஸான் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இந்தச் விடயம் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமைவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக்கொண்டு வந்தார்.
கருத்துகளைச் செவிமடுத்த நீதவான் பஸான் அமரசேன, வழக்கின் இறுதி விசாரணையை ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டதுடன், இன்றைய வழக்கு விசாரணைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்.