சீன தூதுவர் - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு
இலங்கைக்கான புதிய சீன தூதுவர் வேய் ஹுவாசியாங், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு Flower Road அமைந்துள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரை சீன தூதுவர் உத்தியோகபூர்வமாகச் சந்தித்த முதலாவது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் சீன தூதுவருடன், பிரதித் தூதுவர் ஜூ யான்வெய் , ஆலோசகர் மேய் ஜிங் மற்றும் மூன்றாம் செயலாளர் ஜின் என்ஸே ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.