சிம்புதேவனின் ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நவோரியா’. இப்படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் சிம்புதேவனின் முந்தைய படங்களைப் போலவே, ‘நவோரியா’ திரைப்படமும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பதை அதன் முதல் தோற்றம் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் விமலுடன் ஆரி அர்ஜுன், அன் ஷீத்தல், பாலசரவணன், தம்பி ராமையா, நிழல்கள் ரவி, அப்புக்குட்டி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டிசிபி ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் தாரங் படத்தொகுப்புப் பணிகளையும், டி. இமான் இசையமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இத்திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.