சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

arvloshan.com

அரச ஊழியர்களின் மேலதிக சம்பள அதிகரிப்புக் கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, 2026 டிசம்பர் மற்றும் 2027 ஜனவரி மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுமாறு அரச ஊழியர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பைக் கோருவதற்கு முன்னரே, மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக அரச துறை சம்பளங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, 2025 ஜனவரி மற்றும் 2026 ஜனவரி மாதங்களில் சம்பள அதிகரிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அடிப்படைச் சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்டம் 2027 ஜனவரியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், அடிப்படைச் சம்பளம் 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாத்தியமான இடங்களில் மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புகள் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட அவர், டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்குப் போர் உள்ளிட்ட எதிர்பாராத இரண்டு நெருக்கடிகளே தற்போதைய பொருளாதார அழுத்தங்களுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார்.

எனினும், 6,100 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு அரச ஊழியர்களின் சம்பளத்திற்கும், மற்றுமொரு மூன்றில் ஒரு பங்கு ஏனைய செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சம்பள அதிகரிப்பைக் கோருவது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

"அரச ஊழியர்கள் தங்களின் 2026 டிசம்பர் மற்றும் 2027 ஜனவரி மாத சம்பளப் பட்டியல்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுமாறு சவால் விடுக்கின்றேன். அந்த இரண்டு மாதங்களுக்குமான சம்பளத்தில் பாரிய வித்தியாசம் காணப்படும்" எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

...

arvoshan.com

கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...

arvoshan.com

சுப்ரீம் SAT செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை!

...

arvoshan.com

குற்றக் கும்பலுக்கு ரி-56 துப்பாக்கியை விற்றதாகக் குற்றச்சாட்டு – டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

...

arvoshan.com

நெடுந்தீவின் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!

...

arvoshan.com

பிரித்தானியாவால் ஆபிரிக்க நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிரிழப்பு – இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை

...

arvoshan.com

வல்வெட்டித்துறையில் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

...

arvoshan.com

யாழில். 50 மதுபான போத்தலுடன் ஒருவர் கைது

...

arvoshan.com

பாடசாலை மாணவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய மாதிரிச் சந்தை – அரசாங்கம் திட்டம்

...