சசிகுமாரின் ‘நந்தன் 2’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

arvloshan.com

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் சசிகுமார் நடிப்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளாட்சி மன்ற அரசியலின் யதார்த்த சூழலைப் பேசிய ‘நந்தன்’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை ‘இரா என்டர்டெயின்மென்ட்’ (Era Entertainment) நிறுவனம் சார்பில், இயக்குநர் இரா.சரவணனே தயாரித்து, கதையெழுதி இயக்குகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட விளம்பரச் சுவரொட்டி (Title Look) தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்துத் திரைப்படக் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், "சமூக அக்கறை கொண்ட மிக முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்படுகிறது. 'நந்தன்' திரைப்படத்தின் முதல் பாகத்தை விடவும், மேலும் அழுத்தமான ஒரு படைப்பாக இத்திரைப்படம் அமையும். இதில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ்!

...

arvoshan.com

ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவம்: சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!

...

arvoshan.com

அர்ஜுன் தாஸின் புதிய படம்: தமிழில் அறிமுகமாகும் ப்ரீத்தி பகதாலா!

...

arvoshan.com

அரசியல் உறுதிமிக்க தலைமுறையை உருவாக்குகிறார் முதலமைச்சர் விஜய்: இயக்குநர் அட்லீ

...

arvoshan.com

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் ‘மகாராஜா’: சம்பளமின்றி நடிக்கத் தயார் என விஜய் சேதுபதி விருப்பம்!

...

arvoshan.com

தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சை: 'மண்டாடி' பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்

...

arvoshan.com

வருமான வரி வழக்குகள்: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்கள் தள்ளுபடி!

...

arvoshan.com

ஹாலிவுட்டில் மறுஆக்கம் செய்யப்படுகிறது தமிழ் திரைப்படமான ‘மகாராஜா’!

...

arvoshan.com

நடிகர் அஜித்குமாரின் ‘டேர் டெவில்’ திரைப்பட படப்பிடிப்பு நவம்பர் 2-ஆம் திகதி ஆரம்பமாகிறது!

...

arvoshan.com

‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

துருவ் விக்ரமின் 'ஜாக்கி' பட முதல் பார்வை வெளியீடு!

...

arvoshan.com

உளவியல் ரீதியான அமானுஷ்ய படமாக உருவாகிறது ‘மண்டவெட்டி’

...

arvoshan.com

சூர்யா - ஜோதிகா 20-வது திருமண நாள்: உணர்வுபூர்வமான உறுதிமொழிப் பதிவு!

...

arvoshan.com

விக்ரமின் ‘பவர் ஹவுஸ்’ படத்தின் அதிரடி தலைப்பு மற்றும் ப்ரொமோ வெளியீடு!

...

arvoshan.com

அரசியல் களத்தில் மிரட்ட வரும் கவுதம் கார்த்திக்: வெளியானது ‘பிளடி பாலிடிக்ஸ்’ டீசர்!

...