துருவ் விக்ரமின் 'ஜாக்கி' பட முதல் பார்வை வெளியீடு!
திரைப்பட நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை சுவரொட்டி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ (Jackie – No Retakes Allowed) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இத்திரைப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' (Mythri Movie Makers) தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விக்கி ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கின்றார்.
தற்போது வெளியாகியுள்ள திரைப்படத்தின் முதல் பார்வைச் சுவரொட்டியில், நடிகர் துருவ் விக்ரம் மிகுந்த கம்பீரமான மற்றும் புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றார். அத்துடன், நேரடி ஆக்ஷன் காட்சிகளின் தன்மையுடன், சித்திரக் கதை பாணியிலான வடிவமைப்பு இணைக்கப்பட்டு இந்தச் சுவரொட்டி உருவாக்கப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.