வருமான வரி வழக்குகள்: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்கள் தள்ளுபடி!

arvloshan.com

வருமான வரிக் கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யாதது தொடர்பான ஆறு வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி, பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சரியாகச் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக ஆறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளின் விசாரணைகளில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா சார்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த ஆறு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த 2022ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்‌டன. தற்போது மீண்டும் அதே காரணங்களைக் குறிப்பிட்டு, தம்மை விடுவிக்குமாறு மனுத் தாக்கல் செய்துள்ளார்" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த ஆறு வழக்குகளையும் சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தான் வேண்டும். எனவே, வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்கக் கோரும் மனுக்களை ஏற்க இயலாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீதிபதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட ஆறு மனுக்களையும் திரும்பப் பெறுவதாக எஸ்.ஜே.சூர்யா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சை: 'மண்டாடி' பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்

...

arvoshan.com

ஹாலிவுட்டில் மறுஆக்கம் செய்யப்படுகிறது தமிழ் திரைப்படமான ‘மகாராஜா’!

...

arvoshan.com

நடிகர் அஜித்குமாரின் ‘டேர் டெவில்’ திரைப்பட படப்பிடிப்பு நவம்பர் 2-ஆம் திகதி ஆரம்பமாகிறது!

...

arvoshan.com

‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

துருவ் விக்ரமின் 'ஜாக்கி' பட முதல் பார்வை வெளியீடு!

...

arvoshan.com

உளவியல் ரீதியான அமானுஷ்ய படமாக உருவாகிறது ‘மண்டவெட்டி’

...

arvoshan.com

சூர்யா - ஜோதிகா 20-வது திருமண நாள்: உணர்வுபூர்வமான உறுதிமொழிப் பதிவு!

...

arvoshan.com

விக்ரமின் ‘பவர் ஹவுஸ்’ படத்தின் அதிரடி தலைப்பு மற்றும் ப்ரொமோ வெளியீடு!

...

arvoshan.com

அரசியல் களத்தில் மிரட்ட வரும் கவுதம் கார்த்திக்: வெளியானது ‘பிளடி பாலிடிக்ஸ்’ டீசர்!

...

arvoshan.com

‘ராஜா, நீயுமா லேட்டு?’ – நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவுகூர்ந்த இளையராஜா!

...

arvoshan.com

'டோரதி' திரைப்படத்திற்கு டொரான்டோ விழாவில் எழுச்சிமிக்க வரவேற்பு

...

arvoshan.com

15 ஆண்டுகளின் பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் களமிறங்கும் ‘ஜாக்பாட்’

...

arvoshan.com

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியின் ‘பத்தா’: அக்டோபர் 1 இல் திரைக்கு வருகின்றது

...

arvoshan.com

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

...

arvoshan.com

பாடல்கள் பதிப்புரிமை விவகாரம்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் புதிய சிக்கல்

...