எர்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்‌ஷ செப்டம்பர் 30 வரை மீண்டும் விளக்கமறியலில்

arvloshan.com

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான பணச்சலவை வழக்கு விசாரணையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்‌ஷ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக இவரை செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்று மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்த விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மையப்படுத்தியே இவ்வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான சான்றுகளைப் புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாமல் ராஜபக்‌ஷ அண்மையில் இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் எழுந்த சர்ச்சைக்குரிய நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...