ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி நௌஃபருக்கு மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
2018ஆம் ஆண்டு வனாத்தவில்லுவ, லக்டோவத்தை பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த சம்பவம் தொடர்பில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற நௌஃபர் மௌலவிக்கு மேலும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் (Trial-at-Bar), குறித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நௌஃபர் மௌலவி மற்றும் மற்றொரு நபருக்கு தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வனாத்தவில்லுவ, லக்டோவத்தை பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் இணைந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நௌஃபர் மௌலவிக்கு, 2026 செப்டெம்பர் மாதம் 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.