நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாளை (ஒக்டோபர் 27) செவ்வாய்க்கிழமை இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செயலாளர் நாலக களுவெவ வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை ஒக்டோபர் 27ஆம் திகதிக்கு மாத்திரம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.