பொலிஸ் காவலில் 29 வயது இளைஞர் உயிரிழப்பு – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!

arvloshan.com

பொலிஸ் காவலில் இருந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு உப பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக ரீதியிலான குறைபாடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற 29 வயதுடைய இளைஞர், போதைப்பொருள் தொடர்பான விசாரணையொன்றுக்காக கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, பொலிஸ் அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் பல பொலிஸ் அதிகாரிகள் அவரைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் காணப்பட்டதுடன், இரத்தம் வடிந்த நிலையில் மீண்டும் பொலிஸ் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மருத்துவ உதவி வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்த பின்னரே, அவரை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும், எனினும், வைத்தியசாலையைச் சென்றடைந்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஹோமாகம உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் ஆரம்பகட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விரைவானதும் சுயாதீனமானதுமான விசாரணையை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

150 மி.மீ.க்கும் அதிகமான மழை – மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

இலங்கையில் 16 இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி! நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

...

arvoshan.com

மோடியின் பௌத்த மதப் பாதுகாப்பு முயற்சிகளைப் பாராட்டிய இலங்கை பிக்கு – இந்திய அமைச்சர் விசேட செய்தி பகிர்வு!

...

arvoshan.com

இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% அதிகரிப்பு – இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா முன்னேற்றம்!

...

arvoshan.com

கனமழையால் பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாய எச்சரிக்கை

...

arvoshan.com

“நாங்கள் SJB கட்சியின் அடிமைகள் அல்ல” – சஜித் பிரேமதாசவின் அரசியல் போக்கை விமர்சிக்கும் ரிஷாட் பதியுதீன்

...

arvoshan.com

மோசமான வானிலை: நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் நாளை மூடப்படும்!

...

arvoshan.com

இலங்கையில் டெங்கு உயிரிழப்பு 79 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,000 ஐத் தாண்டியது!

...

arvoshan.com

கொக்கல ரயில் விபத்து: பேருந்து சாரதிக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு!

...

arvoshan.com

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

...

arvoshan.com

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்

...

arvoshan.com

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி நௌஃபருக்கு மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

பராமரிப்புக் கொடுப்பனவு வழக்கில் கைதானவருக்கு மன்னிப்பு – ரணில் விக்கிரமசிங்க அடிப்படை உரிமையை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

...

arvoshan.com

கடும் மழை: பாடசாலைகளை மூடுவது தொடர்பில் மாகாண அதிகாரிகளுக்கு அதிகாரம்!

...

arvoshan.com

மருந்து இறக்குமதி விவகாரம்: கெஹலியவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

...