இந்தியாவில் முன்பதிவு வசூலில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’!

arvloshan.com

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையில், இந்தியாவில் டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இதுவரை இந்தியாவில் மட்டும் இத்திரைப்படம் ரூ.52.21 கோடி முன்பதிவு வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம், முந்தைய மார்வெல் திரைப்படமான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் முன்பதிவு வசூல் சாதனையை ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ முறியடித்துள்ளது.

உலகளவில் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படம், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 17ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.

இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுத்த #OpenDoomsdayBooking என்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டது.

முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணித்தியாலங்களிலேயே ரூ.10 கோடி வசூலைக் கடந்த இத்திரைப்படத்துக்கு, புக்மைஷோ (BookMyShow) தளத்தில் முதல் நாளில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் 7,611 காட்சிகளுக்காக சுமார் 8.25 இலட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, பல்வேறு திரையரங்குகள் அதிகாலை 12.01 மணி முதல் இரவு 11.55 மணி வரை தொடர்ச்சியாகக் காட்சிகளைத் திரையிட ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

குறிப்பாக, கேரளாவின் சில திரையரங்குகளில் நள்ளிரவு சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன.

சென்னை, மும்பை, டெல்லி என்.சி.ஆர்., பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

மேலும், மும்பை மற்றும் டெல்லியில் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விலையிடப்பட்டுள்ள 4DX மற்றும் இன்ஃபினிட்டி விஷன் போன்ற பிரீமியம் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முழுமையாக விற்பனையாகியுள்ளன.

ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், அயர்ன் மேன் கதாபாத்திரம் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், இம்முறை டாக்டர் டூம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அவருடன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கிறிஸ் எவான்ஸ், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளோரன்ஸ் பியூ, வனேசா கிர்பி, டாம் ஹிடில்ஸ்டன், இயன் மெக்கெல்லன், பேட்ரிக் ஸ்டீவர்ட், சிமு லியு மற்றும் சானிங் டாட்டம் உள்ளிட்ட முன்னணி ஹொலிவுட் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

மூன்று வெவ்வேறு மார்வெல் பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து டாக்டர் டூமை எதிர்கொள்ளும் கதைக்களத்துடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டிசம்பர் 18ஆம் திகதி ஹொலிவுட்டின் மற்றுமொரு பிரம்மாண்டத் திரைப்படமான ‘ட்யூன்: பாகம் 3’ வெளியாகவுள்ளதால், சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் இரு திரைப்படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘ஓம்: ஆபரேஷன் மோல்’

...

arvoshan.com

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் விஜய் – ரஜினிகாந்த் சந்திப்பு!

...

arvoshan.com

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

...

arvoshan.com

‘அப்பா குட்டி’க்காக விஜய் ஆண்டனியின் ரயில் பயணம்

...

arvoshan.com

வெளியான ஒரே நாளில் 3.8 பில்லியன் டொலர் வருமானம் – புதிய வரலாறு படைத்த GTA 6!

...

arvoshan.com

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘டோரதி’ தேர்வு

...

arvoshan.com

‘எங்களது மௌனத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்’ – மகள் குறித்த வதந்திகளுக்கு அர்ஜுன் பதிலடி

...

arvoshan.com

“எமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது” – ராதிகா ஆப்தே கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்

...

arvoshan.com

13 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகிறது GTA 6 – புதிய விளையாட்டு அம்சங்களுடன் அறிமுகம்

...

arvoshan.com

சிம்புதேவனின் ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

“அடுத்த படம் தமிழில்தான்” – துல்கர் சல்மான் உறுதி!

...

arvoshan.com

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிசம்பர் 24ஆம் திகதி வெளியீடு

...

arvoshan.com

குடும்பத்துடன் கிரீஸில் வலம் வந்த ரஜினிகாந்த் – புகைப்படங்களைப் பகிர்ந்த சவுந்தர்யா

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக இணையும் சிவராஜ்குமார்!

...

arvoshan.com

15 ஆண்டுகால இசைப் பயணம்... நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்த அனிருத்!

...