இந்தியாவில் கரையைக் கடந்த ‘முரசு’ புயல்; கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை

arvloshan.com

இந்தியாவில் ‘முரசு’ (Murasu) புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், வங்காள விரிகுடாவின் சில கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவலின்படி, இந்தியாவில் கரையைக் கடந்துள்ள குறித்த புயல், வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இன்று (03) காலை 11.30 மணியளவில் புயலின் தீவிரம் குறையத் தொடங்கியுள்ளதுடன், இன்று இரவு 11.30 மணியளவில் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், இடியுடன் கூடிய கனமழை மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலைமை காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள், குறிப்பாக பலநாள் மீன்பிடிப் படகுகளில் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இன்று இரவு 11.30 மணியளவில் குறித்த புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (04) அதிகாலை 5.30 மணியளவில் மேலும் வலுவிழந்து தெளிவான குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாகவும் மாறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சென்னையில் ரூ.1,401 கோடி செலவில் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் – முதல்வர் விஜய் ஒப்புதல்

...

arvoshan.com

“தவெக எம்.எல்.ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமா?” – அண்ணாமலை கேள்வி

...

arvoshan.com

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இலங்கையின் கட்டினா பூஜை நிகழ்வு

...

arvoshan.com

சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது: தப்பியோட முயன்ற இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

...

arvoshan.com

உத்தரப் பிரதேசத்தில் கோர விபத்து: கார் தீப்பிடித்து எரிந்ததில் 6 நண்பர்கள் உடல் கருகி உயிரிழப்பு

...

arvoshan.com

கடத்தல் மிரட்டல்: கொல்கத்தாவில் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

...

arvoshan.com

டெல்லியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு; பலரைத் தேடும் பணி தீவிரம்

...

arvoshan.com

ஆந்திர கடற்பகுதியில் 5 சென்னை மீனவர்கள் சடலமாக மீட்பு; 4 பேரைத் தேடும் பணி தீவிரம்

...

arvoshan.com

“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மூன்று மாதக் குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டிய முதல்வர் விஜய் – நெகிழ்ச்சியில் தாய்

...

arvoshan.com

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

...

arvoshan.com

PUBG விளையாட்டின் தாக்கமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

...

arvoshan.com

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை!

...

arvoshan.com

கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி; கல்லறைகளில் மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி

...

arvoshan.com

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன – ஸ்டாலின் குற்றச்சாட்டு

...