கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

arvloshan.com

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் தமிழக முதல்வர் விஜய் இன்று (நவம்பர் 3) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர், முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இதன்போது, கோவை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து அவிநாசி சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, கருமத்தம்பட்டி அருகே தனது வாகனத்தை காவல் நிலையத்துக்குத் திருப்புமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்ற முதல்வர் விஜய், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வரின் எதிர்பாராத வருகையால் அங்கிருந்த காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட காவலர்கள் ஆச்சரியமடைந்தனர்.

காவல் நிலையத்துக்குள் சென்ற முதல்வர், அங்குள்ள பல்வேறு அறைகளைப் பார்வையிட்டதுடன், காவல் ஆய்வாளர் அறையிலும் ஆய்வு செய்தார். இதன்போது, காவல் ஆய்வாளரின் மேசைக்கு எதிரே உள்ள இருக்கையில் முதல்வர் அமர்ந்தார்.

இந்த ஆய்வின்போது, சட்டம் ஒழுங்கு கூடுதல் பொலிஸ் மா அதிபர் அன்பு, மேற்கு மண்டல பொலிஸ் மா அதிபர் ஆர்.வி. ரம்யாபாரதி மற்றும் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோரும் உடனிருந்தனர்.

தொடர்ந்து, காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணனிடம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். குறிப்பாக, காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், முக்கிய கிராமங்கள், சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் பதிவாகியுள்ள வழக்குகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரங்களைக் கேட்டுப் பெற்றார்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் காவல் ஆய்வாளருக்கு வழங்கிய பின்னர் முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

PUBG விளையாட்டின் தாக்கமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

...

arvoshan.com

இந்தியாவில் கரையைக் கடந்த ‘முரசு’ புயல்; கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை

...

arvoshan.com

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை!

...

arvoshan.com

கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி; கல்லறைகளில் மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி

...

arvoshan.com

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன – ஸ்டாலின் குற்றச்சாட்டு

...

arvoshan.com

புதுக்கோட்டையில் 13,676 பேருக்கு ரூ.62.73 கோடி நலத்திட்ட உதவிகள் – முதல்வர் விஜய் வழங்கினார்

...

arvoshan.com

அம்பாசமுத்திரத்தில் நவம்பர் 14-ல் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி? இடைத்தேர்தலுக்கு தயாராகும் தவெக!

...

arvoshan.com

தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியால் கைதிகள் சிறையிலிருந்து தப்பும் நிலை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் – முதல்வர் விஜய்

...

arvoshan.com

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு – முதல்வர் விஜய் உத்தரவு

...

arvoshan.com

விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

...

arvoshan.com

தமிழ்நாடு சிறையில் வலிப்பு வந்ததாக நாடகமாடி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்!

...

arvoshan.com

சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!

...

arvoshan.com

பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை – வேதங்கள், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்

...

arvoshan.com

மியான்மர் ஆயுதப் பயிற்சி வழக்கு: வான்டைக் உள்ளிட்ட 7 பேருக்கு வெளிநாட்டில் தங்க அனுமதி நீடிப்பு

...