விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான திஸ்ஸ குட்டியாராச்சி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, நடைபெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (23) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விசாரணையின் ஒரு பகுதியாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், விசாரணையின் தன்மை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.