கொழும்பில் காசநோய் பரவுவதற்கு அதிக மக்கள் அடர்த்தியே முக்கிய காரணம் – சுகாதார அமைச்சர்

arvloshan.com

கொழும்பு நகரில் அதிக மக்கள் அடர்த்தி காணப்படுவது, காசநோய் (Tuberculosis – TB) பரவுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் சமர்ப்பித்த புள்ளிவிபரங்களின்படி, கொழும்பு நகரில் 2025ஆம் ஆண்டு 968 காசநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது முந்தைய சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையாகும்.

கொழும்பு நகரில் 2019ஆம் ஆண்டு 871 காசநோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 736 ஆகக் குறைந்தது. எனினும், 2021ஆம் ஆண்டு 796 ஆக அதிகரித்தது.

தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு 1,093 பேரும், 2023ஆம் ஆண்டு 1,130 பேரும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களாகப் பதிவாகினர். 2019 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பதிவான அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

அதன் பின்னர், 2024ஆம் ஆண்டு 1,064 ஆகக் குறைந்த காசநோயாளர்களின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டு மேலும் குறைந்து 968 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு 2,264 காசநோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், 2016ஆம் ஆண்டு 2,156 பேரும், 2017ஆம் ஆண்டு 2,051 பேரும், 2018ஆம் ஆண்டு 2,088 பேரும் பதிவாகியிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் காசநோயாளர்களில் 25 சதவீதமானோர் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், காசநோயால் பாதிக்கப்பட்ட சிலர் உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறுவதும் நோய் தொடர்ந்து பரவுவதற்கான மற்றுமொரு காரணியாக அமைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், காசநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நோயாளர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, நடமாடும் மருத்துவச் சேவைகள் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனைகள் ஊடாகவும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்பு நகரில் காசநோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு காணப்படுவதாகவும், 2025ஆம் ஆண்டிலும் இந்த வீழ்ச்சி தொடர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன்

...

arvoshan.com

மயிலத்தமடு – மாதவனை போராட்டம் 3 ஆண்டுகள்: தீர்வில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம்!

...

arvoshan.com

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நான்கு இலஞ்ச வழக்குகளில் பிணை – மற்றொரு வழக்கில் நவம்பர் 6 வரை விளக்கமறியல்!

...

arvoshan.com

விஹாரமஹாதேவி பூங்காவில் பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டம்: நீதிமன்ற உத்தரவைத் திருத்தக் கோரிய மனு நிராகரிப்பு!

...

arvoshan.com

ஹுலங்கமுவ, ரணிலின் பொருளாதார ஆலோசகர் அல்ல! – ஹர்ஷாவின் கூற்றுக்கு ரணில் அலுவலகம் மறுப்பு

...

arvoshan.com

வாப்போயா தினத்தை முன்னிட்டு வங்கியின் பெயரில் போலி பரிசுச் செய்தி – பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

...

arvoshan.com

சம்மாந்துறையில் மயங்கி விழுந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை!

...

arvoshan.com

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் கலெல்லே சுமனசிறி தேரர் நியமனம்!

...

arvoshan.com

லிட்ரோ எரிவாயு: அடுத்த மூன்று நாட்களில் 350,000 சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டம்

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதம் எழுதிய மஹிந்த

...

arvoshan.com

LankaQR பயனர்களுக்கு ரூ. 5.1 கோடி பரிசு; ஒக்டோபர் 27 முதல் அதிர்ஷ்டக் குலுக்கல்!

...

arvoshan.com

தாய், மகனை சட்டவிரோதமாகத் தடுத்து துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை

...

arvoshan.com

வெறிநாய்த் தடுப்பு மற்றும் நாய்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றக் குழு அனுமதி!

...

arvoshan.com

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவைச் சிகிச்சை வெற்றி!

...

arvoshan.com

பாஸ்பேட் இறக்குமதி இலஞ்ச விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்!

...