யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைகளா? – அரசாங்கத்திடம் சாணக்கியன் கேள்வி

arvloshan.com

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளை எழுப்பிய அவர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பில் கவலை வெளியிட்டார்.

குறிப்பாக, பாடசாலைகள், கோவில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இவ்வாறான மதுபானசாலைகளை அமைப்பதற்கு எதிராகப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும், மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

குறித்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பெயர்கள், அவற்றின் மூலம் பயனடைந்தவர்கள் குறித்த விபரங்கள், முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் முடிவுகள் மற்றும் பின்னர் இரத்துச் செய்யப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அவர் கோரினார்.

இதேவேளை, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை பரவலாக இடம்பெறுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதுடன், மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சட்டபூர்வமாக உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் அதிக வரிகள் காரணமாக, நுகர்வோர் குறைந்த விலையில் கிடைக்கும் சட்டவிரோத மதுபானங்களை நாடுகின்றனரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இத்தகைய நிலைமை, மதுபானம் தொடர்பான சுகாதாரப் பாதிப்புகளை அதிகரிப்பதுடன், பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் மீதான சுமையையும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத மதுபானம் தொடர்பாகப் பதிவான குற்றங்கள் மற்றும் மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த மாவட்ட ரீதியான புள்ளிவிபரங்களையும் அவர் கோரினார்.

மேலும், 2024 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்மொழியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான விபரங்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், பொதுமக்களின் ஆட்சேபனைகளைக் கருத்திற்கொள்ளுதல் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

சாணக்கியன் இராசமாணிக்கத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகரிக்கும் வகையில் மதுவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைபுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதுள்ள சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சட்டத் திருத்தங்கள் உரிய முறையில் உள்ளடக்கப்பட்ட பின்னர், அவை விரைவில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன்

...

arvoshan.com

மயிலத்தமடு – மாதவனை போராட்டம் 3 ஆண்டுகள்: தீர்வில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம்!

...

arvoshan.com

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நான்கு இலஞ்ச வழக்குகளில் பிணை – மற்றொரு வழக்கில் நவம்பர் 6 வரை விளக்கமறியல்!

...

arvoshan.com

விஹாரமஹாதேவி பூங்காவில் பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டம்: நீதிமன்ற உத்தரவைத் திருத்தக் கோரிய மனு நிராகரிப்பு!

...

arvoshan.com

ஹுலங்கமுவ, ரணிலின் பொருளாதார ஆலோசகர் அல்ல! – ஹர்ஷாவின் கூற்றுக்கு ரணில் அலுவலகம் மறுப்பு

...

arvoshan.com

வாப்போயா தினத்தை முன்னிட்டு வங்கியின் பெயரில் போலி பரிசுச் செய்தி – பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

...

arvoshan.com

சம்மாந்துறையில் மயங்கி விழுந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை!

...

arvoshan.com

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் கலெல்லே சுமனசிறி தேரர் நியமனம்!

...

arvoshan.com

லிட்ரோ எரிவாயு: அடுத்த மூன்று நாட்களில் 350,000 சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டம்

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதம் எழுதிய மஹிந்த

...

arvoshan.com

கொழும்பில் காசநோய் பரவுவதற்கு அதிக மக்கள் அடர்த்தியே முக்கிய காரணம் – சுகாதார அமைச்சர்

...

arvoshan.com

LankaQR பயனர்களுக்கு ரூ. 5.1 கோடி பரிசு; ஒக்டோபர் 27 முதல் அதிர்ஷ்டக் குலுக்கல்!

...

arvoshan.com

தாய், மகனை சட்டவிரோதமாகத் தடுத்து துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை

...

arvoshan.com

வெறிநாய்த் தடுப்பு மற்றும் நாய்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றக் குழு அனுமதி!

...

arvoshan.com

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவைச் சிகிச்சை வெற்றி!

...