மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு வீழ்ச்சி; 9இல் வாக்கு எண்ணிக்கை!

arvloshan.com

தமிழகத்தின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்காக நேற்று (06) நடைபெற்ற இடைத்தேர்தலில், கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலை விடவும் குறைவான வாக்குப்பதிவே பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, இத்தொகுதிகளில் அதிமுக (AIADMK) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அவர்கள் அக்கட்சியில் இணைந்தனர். இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட இவ்விரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக (DMK), அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவியது. நேற்று காலை 7.00 மணியளவில் வாக்குப்பதிவு ஆரம்பமானதுடன், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துணை இராணுவப் படையினரின் பங்களிப்புடன் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்றைய வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகளும், தாராபுரம் (தனி) தொகுதியில் 80.31 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவீத வாக்குகளும், தாராபுரம் (தனி) தொகுதியில் 89.92 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் நோக்குகையில், நடப்பு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவானது தோராயமாக 6 முதல் 9 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளது. இந்த வாக்குச் சரிவானது வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்விரு தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 9ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

2023க்குப் பின்னரான அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை

...

arvoshan.com

இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கேரளப் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

...

arvoshan.com

இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

...

arvoshan.com

சாலை வசதியில்லை: கர்ப்பிணியை 8 கி.மீ. தூளியில் சுமந்து சென்ற உறவினர்கள்!

...

arvoshan.com

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

...

arvoshan.com

செனாப் பாலத்தில் 100 கி.மீ வேகத்தில் இயக்கி வந்தே பாரத் ரயில் சாதனை!

...

arvoshan.com

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: டெல்லி, மும்பையில் 500 பேர் கைது

...

arvoshan.com

கணவரைக் கொன்று பீப்பாயில் மறைத்த மனைவி, கள்ளக்காதலன் குற்றவாளிகள்: மீரட் நீதிமன்றம் தீர்ப்பு!

...

arvoshan.com

கதர் ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் வாங்குமாறு தமிழக முதல்வர் விஜய் வேண்டுகோள்

...

arvoshan.com

‘ஃப்ளை துபாய்’ விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் அரசின் உயரிய விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு

...

arvoshan.com

“தி.மு.க-வை எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேச உரை

...

arvoshan.com

அரபிக்கடலில் 3,000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்: 5 பாகிஸ்தானியர்கள் கைது!

...

arvoshan.com

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!

...

arvoshan.com

2 நாளில் 9 கொலைகள்: முதல்வர் விஜய்யை சாடும் உதயநிதி, கனிமொழி!

...