‘ஃப்ளை துபாய்’ விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் அரசின் உயரிய விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு

arvloshan.com

இஸ்ரேல் நோக்கிய வான்வழிப் பயணத்தின்போது, கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, ‘விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்’ விருது வழங்கி கௌரவிக்கப்படும் என குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

‘ஃப்ளை துபாய்’ நிறுவனத்தின் விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார், குஜராத் வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இவர் பயணித்த விமானம் தாக்குதலுக்கு உள்ளானதில் பலத்த காயமடைந்து, தீவிர இரத்தப் போக்கிற்கு மத்தியிலும் துணிச்சலாகச் செயற்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கி, 174 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். இவரது இந்த வீரச் செயல் உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

இது குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் விடுத்துள்ள உத்தியோகபூர்வ ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும், 174 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்ற கேப்டன் ஸ்மித் மச்சார் காட்டிய அசாதாரண துணிச்சல் உலகளவில் போற்றத்தக்கதுடன், அனைவருக்கும் பெரும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது.

குஜராத்தின் வீர மகனான இவர், தனது அளப்பரிய வீரத்தின் மூலம் குஜராத் மாநிலத்திற்கும் இந்திய நாட்டிற்கும் உலகளவில் நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளார். இவரது நரம்புகளில் ஓடும் குஜராத்திய உணர்வு நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது.

அவரது இந்த வீரம் மற்றும் மனிதாபிமானச் செயலைப் பாராட்டும் வகையில், குஜராத் அரசு அவருக்கு 'விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்' விருதை வழங்கி கௌரவிக்க தீர்மானித்துள்ளது."

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் விமானி ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைய சோமநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் மிருத்யுஞ்சய மந்திர ஜபமும் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர், அவர் முழு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விமானி ஸ்மித் மச்சார் பூர்வீக ரீதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அவரது குடும்பத்தினர் நீண்ட காலத்திற்கு முன்பே மும்பைக்கு புலம்பெயர்ந்து விட்டதாக அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கணவரைக் கொன்று பீப்பாயில் மறைத்த மனைவி, கள்ளக்காதலன் குற்றவாளிகள்: மீரட் நீதிமன்றம் தீர்ப்பு!

...

arvoshan.com

கதர் ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் வாங்குமாறு தமிழக முதல்வர் விஜய் வேண்டுகோள்

...

arvoshan.com

“தி.மு.க-வை எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேச உரை

...

arvoshan.com

அரபிக்கடலில் 3,000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்: 5 பாகிஸ்தானியர்கள் கைது!

...

arvoshan.com

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!

...

arvoshan.com

2 நாளில் 9 கொலைகள்: முதல்வர் விஜய்யை சாடும் உதயநிதி, கனிமொழி!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி தலைவர்கள் அக். 1-இல் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

மேற்கு வங்கத்திலும் காலடி பதித்தது தவெக: சமூகப் பணிகள் மூலம் மக்களைக் கவர திட்டம்!

...

arvoshan.com

மதுரையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட 'ரோடு ஷோ': கடுமையான வெயிலில் 10 பேர் மயக்கம்!

...

arvoshan.com

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை: 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்!

...

arvoshan.com

இந்தியாவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் வீழ்ந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

...

arvoshan.com

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் விஜய்

...

arvoshan.com

சூரியசக்தித் துறையில் 16 பில்லியன் $ முதலீடு: இந்தியாவிற்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிச் சவால்!

...

arvoshan.com

‘விஜய்யை சாடிய ஸ்டாலின்’: முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை சுயபரிசோதனை செய்ய கோரிக்கை!

...

arvoshan.com

ஜெம் வீரமணி வழக்கைப் பூசிமெழுகிய திமுக: மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாடல்!

...