சாலை வசதியில்லை: கர்ப்பிணியை 8 கி.மீ. தூளியில் சுமந்து சென்ற உறவினர்கள்!

arvloshan.com

ஆந்திரப் பிரதேசத்தில் சாலை வசதியற்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர், உறவினர்களால் தூளியில் வைத்து 8 கிலோமீற்றர் தூரம் சுமந்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் மாநிலத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் தடகபல்லி எனும் தொலைதூர மலைக்கிராமத்தைச் சேர்ந்த மங்கராஜு என்பவரின் மனைவி தாமினி (27) என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்பது மாத கர்ப்பிணியான தாமினிக்குக் கடந்த வியாழக்கிழமை திடீரெனக் கடும் பிரசவ வலி ஏற்பட்டது. எனினும், அக்கிராமத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அடைவதற்கு முறையான பாதை வசதிகள் எதுவுமில்லை. அத்துடன், அடர்ந்த காடுகள், மலைப் பாதைகள் மற்றும் நீர்நிலைகளைக் கடந்து செல்வதுடன், அண்மையில் பெய்த கனமழை காரணமாகப் பாதைகள் முற்றிலும் சேதமடைந்திருந்தன.

இதன் காரணமாக, ஆபத்தான நிலையிலிருந்த கர்ப்பிணியைக் காப்பாற்றும் நோக்கில், உறவினர்கள் அவரைத் துணியால் செய்யப்பட்ட தூளி ஒன்றில் அமரவைத்து, கரடுமுரடான மலைப்பாதை வழியாக 8 கிலோமீற்றர் தூரத்திற்குச் சுமந்து சென்றனர்.

அதன்பின்னர், சாமகட்டா எனும் பகுதியை அடைந்ததும் அங்கிருந்து ஜீப் (Jeep) வாகனம் மூலம் சிந்தபல்லி பகுதியில் அமைந்துள்ள பிராந்திய மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமினிக்கு உடனடியாக அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டதை அடுத்து, அவர் அழகான பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாகப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அடிப்படைச் சாலை வசதிகளோ மின்விளக்கு வசதிகளோ இன்றித் தாம் அன்றாடம் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அப்பகுதி மலைவாழ் மக்கள், தடகபல்லி கிராமத்திலிருந்து சாமகட்டா வரையிலான வீதிகளை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

...

arvoshan.com

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

...

arvoshan.com

செனாப் பாலத்தில் 100 கி.மீ வேகத்தில் இயக்கி வந்தே பாரத் ரயில் சாதனை!

...

arvoshan.com

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: டெல்லி, மும்பையில் 500 பேர் கைது

...

arvoshan.com

கணவரைக் கொன்று பீப்பாயில் மறைத்த மனைவி, கள்ளக்காதலன் குற்றவாளிகள்: மீரட் நீதிமன்றம் தீர்ப்பு!

...

arvoshan.com

கதர் ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் வாங்குமாறு தமிழக முதல்வர் விஜய் வேண்டுகோள்

...

arvoshan.com

‘ஃப்ளை துபாய்’ விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் அரசின் உயரிய விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு

...

arvoshan.com

“தி.மு.க-வை எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேச உரை

...

arvoshan.com

அரபிக்கடலில் 3,000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்: 5 பாகிஸ்தானியர்கள் கைது!

...

arvoshan.com

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!

...

arvoshan.com

2 நாளில் 9 கொலைகள்: முதல்வர் விஜய்யை சாடும் உதயநிதி, கனிமொழி!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி தலைவர்கள் அக். 1-இல் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

மேற்கு வங்கத்திலும் காலடி பதித்தது தவெக: சமூகப் பணிகள் மூலம் மக்களைக் கவர திட்டம்!

...

arvoshan.com

மதுரையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட 'ரோடு ஷோ': கடுமையான வெயிலில் 10 பேர் மயக்கம்!

...

arvoshan.com

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை: 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்!

...