2023க்குப் பின்னரான அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை

arvloshan.com

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடாத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் எனப் பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

"தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஊடாக வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடி மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கக்கூடிய முதன்மையான உரிமை வாக்குரிமை மட்டுமேயாகும்.

எனினும், தற்பொழுது 13 கோடி மக்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனை வெறும் 'வாக்காளர் நீக்கம்' என்ற கோணத்தில் மட்டும் பார்க்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசு, தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் குழுவில் மாற்றங்களை மேற்கொண்டதிலிருந்தே இந்தப் பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. அத்துடன், இதனைச் சரியாகக் கண்காணிக்க வேண்டிய உச்ச நீதிமன்றமும் இதற்குத் துணையாக இருந்துள்ளது.

எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர் மீது முறையான விசாரணைகளை நடத்த வேண்டும். அதுமட்டுமன்றி, 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடாத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த அநீதிக்கு எதிராக மக்கள் அனைவரும் வீதியில் இறங்கிப் போராட முன்வர வேண்டும்.

ஊடகங்களின் குரலே மக்களின் குரலாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில்லை. இதே கருத்தையே தமிழகத்தின் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும் நான் கூற விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு வீழ்ச்சி; 9இல் வாக்கு எண்ணிக்கை!

...

arvoshan.com

இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கேரளப் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

...

arvoshan.com

இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

...

arvoshan.com

சாலை வசதியில்லை: கர்ப்பிணியை 8 கி.மீ. தூளியில் சுமந்து சென்ற உறவினர்கள்!

...

arvoshan.com

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

...

arvoshan.com

செனாப் பாலத்தில் 100 கி.மீ வேகத்தில் இயக்கி வந்தே பாரத் ரயில் சாதனை!

...

arvoshan.com

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: டெல்லி, மும்பையில் 500 பேர் கைது

...

arvoshan.com

கணவரைக் கொன்று பீப்பாயில் மறைத்த மனைவி, கள்ளக்காதலன் குற்றவாளிகள்: மீரட் நீதிமன்றம் தீர்ப்பு!

...

arvoshan.com

கதர் ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் வாங்குமாறு தமிழக முதல்வர் விஜய் வேண்டுகோள்

...

arvoshan.com

‘ஃப்ளை துபாய்’ விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் அரசின் உயரிய விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு

...

arvoshan.com

“தி.மு.க-வை எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேச உரை

...

arvoshan.com

அரபிக்கடலில் 3,000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்: 5 பாகிஸ்தானியர்கள் கைது!

...

arvoshan.com

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!

...

arvoshan.com

2 நாளில் 9 கொலைகள்: முதல்வர் விஜய்யை சாடும் உதயநிதி, கனிமொழி!

...