நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிணை மறுப்பு!
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதன்படி, இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இருவரும் பிணை கோரியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.