ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவைச் சிகிச்சை வெற்றி!
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து, அவருக்கு இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிர்காலத்தில் மற்றுமொரு திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அடுத்த அறுவைச் சிகிச்சைக்கான திகதி மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.