முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்: திமுக பெண் கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் 95-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட சுதா தீனதயாளன், தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த பேச்சைக் கண்டித்து, தவெக நிர்வாகியான உதயகுமார் என்பவர் சென்னை எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஆகியோருக்கு எதிராக மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சுதா தீனதயாளனிடம் விசாரணை நடத்துவதற்காக எஸ்பிளனேட் காவல் நிலையப் பொலிஸார் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.