மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு!

arvloshan.com

இலங்கையின் மாத்தறை, தலல்ல பகுதியில் உள்ள நவதுன்ன கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை கடலோரக் காவல்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை (24) இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய 10 சாக்குப் பைகள் மற்றும் 11 பயணப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் (PNB) உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 200 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 கிலோகிராம் ஹெரோயினும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம், சுமார் 97 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 1818 அல்லது 1997 என்ற அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!

...

arvoshan.com

நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம் – கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை!

...

arvoshan.com

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16இல் போராட்டம்!

...

arvoshan.com

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் உயிரிழப்பு; 11 பேர் காயம்

...

arvoshan.com

இலங்கையின் 80 அரச இணையத்தளங்களுக்கு சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஆய்வாளர் எச்சரிக்கை!

...

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் இலவச பராமரிப்பு நிலையம் திறப்பு!

...

arvoshan.com

ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்!

...

arvoshan.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 58.5 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

...

arvoshan.com

சிறையில் உள்ள மதத் தலைவர்கள் மத ஆடைகளை அணிய புதிய விதிமுறைகள் வெளியீடு!

...

arvoshan.com

நாட்டுக்காக 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ஷ

...

arvoshan.com

இறால் பிடிப்புத் தடையை மீறிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

...

arvoshan.com

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

...

arvoshan.com

ரூ. 770 கோடி செலவில் அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி நேரில் ஆய்வு!

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவின்படி பௌஸியின் பகிரங்க மன்னிப்புக் கோரல் பத்திரிகையில் வெளியீடு

...

arvoshan.com

மோட்டார் விளையாட்டுச் சங்கத்தின் பதிவை இடைநிறுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்!

...