ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உத்தியோகபூர்வ ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்திய பின்னரே அவற்றைப் பகிருமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.