மோட்டார் விளையாட்டுச் சங்கத்தின் பதிவை இடைநிறுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்!

arvloshan.com

இலங்கையின் மோட்டார் விளையாட்டுகளுக்கான தேசிய விளையாட்டுச் சங்கத்தின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அதன் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33ஆம் பிரிவுகளின் கீழ், 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட 2511/21ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கத்தின் நிர்வாகத்தை முறையாக முன்னெடுப்பதற்கும், விளையாட்டுச் சட்டத்துக்கு அமைவாக அதன் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட தேவையான மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கும் இந்தப் பதிவு இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், அதன் யாப்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் புதிய நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்துதல் ஆகிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட யாப்புக்கு அமைவாக வருடாந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் முறையாகத் தெரிவுசெய்யப்படும் வரை, சங்கத்தின் செயற்பாடுகளை அமைச்சின் செயலாளர் தொடர்ந்து முன்னெடுப்பார் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குவிதிகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!

...

arvoshan.com

நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம் – கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை!

...

arvoshan.com

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16இல் போராட்டம்!

...

arvoshan.com

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் உயிரிழப்பு; 11 பேர் காயம்

...

arvoshan.com

இலங்கையின் 80 அரச இணையத்தளங்களுக்கு சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஆய்வாளர் எச்சரிக்கை!

...

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் இலவச பராமரிப்பு நிலையம் திறப்பு!

...

arvoshan.com

ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்!

...

arvoshan.com

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 58.5 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

...

arvoshan.com

சிறையில் உள்ள மதத் தலைவர்கள் மத ஆடைகளை அணிய புதிய விதிமுறைகள் வெளியீடு!

...

arvoshan.com

நாட்டுக்காக 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ஷ

...

arvoshan.com

இறால் பிடிப்புத் தடையை மீறிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

...

arvoshan.com

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

...

arvoshan.com

ரூ. 770 கோடி செலவில் அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி நேரில் ஆய்வு!

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவின்படி பௌஸியின் பகிரங்க மன்னிப்புக் கோரல் பத்திரிகையில் வெளியீடு

...