மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் உயிரிழப்பு; 11 பேர் காயம்

arvloshan.com

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவத்தினரின் டிஃபென்டர் (Defender) வாகனம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (ஒக்டோபர் 24) கிளியன்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் பயணித்த 12 இராணுவ வீரர்களும் படுகாயமடைந்த நிலையில், ஆரம்பகட்ட சிகிச்சைக்காக பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்தவர்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏனைய 11 பேரும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, காயமடைந்த இராணுவ வீரர்களின் நலன் குறித்து அறிந்துகொள்வதற்காக வைத்தியசாலைகளுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இராணுவ டிஃபென்டர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!

...

arvoshan.com

நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம் – கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை!

...

arvoshan.com

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16இல் போராட்டம்!

...

arvoshan.com

இலங்கையின் 80 அரச இணையத்தளங்களுக்கு சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஆய்வாளர் எச்சரிக்கை!

...

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் இலவச பராமரிப்பு நிலையம் திறப்பு!

...

arvoshan.com

ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்!

...

arvoshan.com

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 58.5 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

...

arvoshan.com

சிறையில் உள்ள மதத் தலைவர்கள் மத ஆடைகளை அணிய புதிய விதிமுறைகள் வெளியீடு!

...

arvoshan.com

நாட்டுக்காக 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ஷ

...

arvoshan.com

இறால் பிடிப்புத் தடையை மீறிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

...

arvoshan.com

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

...

arvoshan.com

ரூ. 770 கோடி செலவில் அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி நேரில் ஆய்வு!

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவின்படி பௌஸியின் பகிரங்க மன்னிப்புக் கோரல் பத்திரிகையில் வெளியீடு

...

arvoshan.com

மோட்டார் விளையாட்டுச் சங்கத்தின் பதிவை இடைநிறுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்!

...