பொலிஸாருக்கு 400 மின்சார கார்கள், 65,000 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கத் திட்டம்!

arvloshan.com

இலங்கை பொலிஸ் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு 400 மின்சாரக் கார்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 65,000 மின்சார மோட்டார் சைக்கிள்களும் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இதன்படி, 400 மின்சாரக் கார்கள் 2027ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் பரிசோதகர் வரையிலான தரங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு வரியற்ற அடிப்படையில் மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக வட்டியில்லாக் கடன் வசதிகளை வழங்குவதுடன், குறித்த மோட்டார் சைக்கிள்களுக்குப் பொருந்தும் வரிகளையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

மேலும், 2027ஆம் ஆண்டுக்காகப் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, 92 பொலிஸ் நிலையங்களுக்கான உத்தியோகத்தர் குடியிருப்புகளை நிர்மாணித்தல், மேலும் 389 பொலிஸ் நிலையங்களில் 308 மில்லியன் ரூபா செலவில் சிசிடிவி கண்காணிப்பு கமராக்களைப் பொருத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், உடலில் பொருத்தக்கூடிய கமராக்கள் (Body Cameras) மற்றும் ஏனைய அத்தியாவசிய உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடைகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் சீருடை வடிவமைப்பு புதிய பொலிஸ் சீருடை அல்ல என அமைச்சர் தெளிவுபடுத்தினார். புதிய சீருடை தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், மனப்பாங்கு மாற்றங்கள் மற்றும் நவீன உபகரணங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக, நவீனத்துவம் மிக்கதும் தொழில்முறைத் திறன் கொண்டதுமான பொலிஸ் சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உலக அமைதிக்கும் நல்லாட்சிக்கும் புத்த தர்மத்தின் போதனைகள் அவசியம் – ஜனாதிபதி அநுர

...

arvoshan.com

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் தடை!

...

arvoshan.com

கற்பிட்டியில் 827 கிலோ கெண்டி இலைகள் கடற்படையினரால் மீட்பு – ஒருவர் கைது!

...

arvoshan.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

...

arvoshan.com

கினிகத்தேனையில் பேருந்தின் மீது பாறை விழுந்து பயணி ஒருவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

கத்தோலிக்க பாடசாலைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழு நியமனம்

...

arvoshan.com

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ. 27.5 பில்லியன் வருமானம்!

...

arvoshan.com

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 இலங்கை குற்றவாளிகள் வெளிநாடுகளில் அடையாளம் – 17 பேர் டுபாயில்!

...

arvoshan.com

எஹெலியகொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் காயம்

...

arvoshan.com

தென் கொரிய விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டனர்!

...

arvoshan.com

“எம்மைப் பிரிந்த பின்னரும் மற்றவர்களுக்கு உயிர் கொடுத்த என் மகன்” – 19 வயது இளைஞனின் இறுதி மனிதநேயக் கொடை

...

arvoshan.com

19 வயது இளைஞரின் இதயத்தால் உயிர் பிழைத்த 14 வயது சிறுவன்!

...

arvoshan.com

தென் கொரியாவில் விபத்து – உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் கடன் தரப்படுத்தலை மீண்டும் B+ நிலைக்கு உயர்த்த முடியும் – அரசாங்கம் நம்பிக்கை!

...

arvoshan.com

கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து ஆராய 43 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்!

...