உலக அமைதிக்கும் நல்லாட்சிக்கும் புத்த தர்மத்தின் போதனைகள் அவசியம் – ஜனாதிபதி அநுர

arvloshan.com

உலகளாவிய சமாதானம், சமூக நீதி மற்றும் நீதியான அரச நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கு புத்த தர்மத்தின் போதனைகள் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

போர், வன்முறை மற்றும் வெறுப்பினால் பிளவுபட்டுள்ள உலகில் கருணை, அன்பு, ஞானம் மற்றும் சமத்துவம் ஆகிய பௌத்தக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் 11ஆவது பொதுக் கூட்டத்தின் இரண்டாவது செயற்குழுக் கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (28) சனிக்கிழமை களனி நாகானந்தா சர்வதேச பௌத்தக் கல்வி நிறுவனத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

டிசெம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 39 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். பௌத்த பிக்குகள், பிக்குணிகள், கல்வியாளர்கள் மற்றும் இல்லறத்தார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, நவம்பர் 30ஆம் திகதி அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் உலக அமைதிக்கான விசேட வழிபாடும், டிசெம்பர் முதலாம் திகதி ருவான்வெலிசாய மற்றும் கண்டி தலதா மாளிகையை மையப்படுத்திய சமய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

1966ஆம் ஆண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனம், தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ரயானம் ஆகிய பௌத்த மரபுகளைச் சேர்ந்த சமூகங்களை ஒன்றிணைத்து உலக அமைதிக்குப் பங்களித்து வருகின்றது.

புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவுக்கும், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் அணுகுண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானதற்கும் இடையிலான வரலாற்று முரண்பாடு, மனிதகுலம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும். அழிவை விடுத்து கருணை, ஞானம் மற்றும் அமைதியின் பாதையை உலகம் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

புத்தரின் போதனைகள் எந்தவொரு இனம், மதம் அல்லது பிரதேசத்திற்கும் மட்டும் உரித்தானவை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, சாதி, மதம், பாலினம் மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் சமமான மதிப்பும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரச நிர்வாகம் விருப்பு, வெறுப்பு, அச்சம் மற்றும் அறியாமை ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக சாக்கியர் மற்றும் கோலியர் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை புத்தர் சமரசம் செய்ததையும், மக்களின் ஒப்புதலின் அடிப்படையில் ஆட்சியாளர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற கருத்தை அக்ஞ்ஞ சுத்தம் எடுத்துரைப்பதையும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் விவசாயக் கருவிகள், வணிகர்களுக்கு மூலதனம், அரச ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை குடதந்த சுத்தம் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

வறுமை குற்றச்செயல்களுக்கும் சமூகச் சீர்குலைவுக்கும் வழிவகுக்கும் என்பதை சக்கவத்தி சீஹநாத சுத்தம் விளக்குவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதார ஒழுக்கம், வருமானத்தை முறையாகப் பகிர்ந்து செலவிடுதல், முதலீடு, சேமிப்பு மற்றும் கடனற்ற வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், நான்கு பிரம்மவிஹாரங்கள், பத்து அரச கடமைகள் மற்றும் சங்கஹ வத்துக்கள் ஆகிய பௌத்தக் கோட்பாடுகள் சிறந்த அரச நிர்வாகத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிகாட்டுவதாக அவர் தெரிவித்தார்.

அசோக மன்னரின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மூன்றாவது பௌத்த சங்காயனையைத் தொடர்ந்து, மஜ்ஜிம தேரர் இமயமலைப் பகுதிக்கும், சோணர் மற்றும் உத்தரர் சுவர்ணபூமிக்கும், மகிந்த தேரர் இலங்கைக்கும் தர்மப் பிரசாரத்திற்காகச் சென்ற வரலாற்றையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

இறுதியாக, தொழில்நுட்பம் உலகை ஒன்றிணைத்தாலும், மனித உள்ளங்களை ஒன்றிணைப்பது அறநெறியும் பரஸ்பரப் புரிதலுமே என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் தடை!

...

arvoshan.com

கற்பிட்டியில் 827 கிலோ கெண்டி இலைகள் கடற்படையினரால் மீட்பு – ஒருவர் கைது!

...

arvoshan.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

...

arvoshan.com

கினிகத்தேனையில் பேருந்தின் மீது பாறை விழுந்து பயணி ஒருவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

கத்தோலிக்க பாடசாலைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழு நியமனம்

...

arvoshan.com

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ. 27.5 பில்லியன் வருமானம்!

...

arvoshan.com

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 இலங்கை குற்றவாளிகள் வெளிநாடுகளில் அடையாளம் – 17 பேர் டுபாயில்!

...

arvoshan.com

எஹெலியகொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் காயம்

...

arvoshan.com

தென் கொரிய விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டனர்!

...

arvoshan.com

“எம்மைப் பிரிந்த பின்னரும் மற்றவர்களுக்கு உயிர் கொடுத்த என் மகன்” – 19 வயது இளைஞனின் இறுதி மனிதநேயக் கொடை

...

arvoshan.com

பொலிஸாருக்கு 400 மின்சார கார்கள், 65,000 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கத் திட்டம்!

...

arvoshan.com

19 வயது இளைஞரின் இதயத்தால் உயிர் பிழைத்த 14 வயது சிறுவன்!

...

arvoshan.com

தென் கொரியாவில் விபத்து – உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் கடன் தரப்படுத்தலை மீண்டும் B+ நிலைக்கு உயர்த்த முடியும் – அரசாங்கம் நம்பிக்கை!

...

arvoshan.com

கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து ஆராய 43 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்!

...