சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் தடை!
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பாடரீதியான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைக்குத் தொடர்புடைய மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் ஆகிய செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.