படப்புத்தகங்களின் விலையில் 18% குறைப்பு – டிசம்பர் 1 முதல் அமுல்!
இலங்கை முழுவதும் விற்பனை செய்யப்படும் பயிற்சிப் புத்தகங்களின் (Exercise Books) சில்லறை விலைகளை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 18 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) விலக்களிப்புகள் மற்றும் சலுகைகளின் காரணமாகவே இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பயிற்சிப் புத்தகங்களின் சில்லறை விலைகளும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.