நைஜீரியாவில் 33.95 கிலோ கஞ்சாவுடன் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கைது!

arvloshan.com

நைஜீரியாவுக்கு வந்த அமெரிக்க தொழில்முறை கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவர், தனது பயணப் பொதிகளில் 33.95 கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான கிரீன் டாமொன்டே கீரி (Greene Da’monte Khiree) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என நைஜீரியாவின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NDLEA) தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தனது பயணப் பொதிகள் இரண்டையும் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் கைவிட்டுவிட்டு, கையடக்கப் பொதியுடன் மட்டும் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது அதிகாரிகள் அவரை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரது பெயர் அடையாள அட்டைகள் பொருத்தப்பட்டிருந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் 16 பொதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த அதிக வீரியமுடைய கஞ்சா வகை கண்டுபிடிக்கப்பட்டதாக NDLEA தெரிவித்துள்ளது.

தாய்லாந்திலிருந்து நைஜீரியாவுக்கு வந்த அவர், கடந்த 2025 ஒக்டோபர் முதல் தாய்லாந்தில் வசித்து வந்ததுடன், அங்கு தொழில்முறை கூடைப்பந்தாட்டத்திலும் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தனது கூடைப்பந்தாட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக புதிய தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் நைஜீரியாவுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். எனினும், அவரது கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்தபோது, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான அவரது தொடர்புகள் மற்றும் ஈடுபாடு குறித்த தகவல்கள் கிடைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், நைஜீரியா சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்திக்கான முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. அந்நாட்டில் அண்மைக்காலமாகப் பெருமளவிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் நைஜீரியாவில் தொடர்புகளை ஏற்படுத்தி, அங்கு போதைப்பொருட்களை உற்பத்தி செய்து ஏனைய நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

...

arvoshan.com

இரண்டு நாட்களில் 2,200க்கும் மேற்பட்ட குடியேறிகள் கேனரி தீவுகளை வந்தடைந்தனர்!

...

arvoshan.com

சீனப் போட்டியால் நெருக்கடியில் ஜாகுவார்; 4,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

...

arvoshan.com

டிக்டொக் காணொளி படப்பிடிப்பின்போது வனவிலங்கு தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் இருவர் கைது

...

arvoshan.com

அமெரிக்காவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு – 30க்கும் மேற்பட்டோர் காயம்!

...

arvoshan.com

அமெரிக்க வான்பரப்பில் நான்கு மணி நேரப் பெரும் குழப்பம் – என்ன நடந்தது?

...

arvoshan.com

ரஷ்யாவில் தொடர் குண்டுவெடிப்புகள்: இராணுவ அதிகாரி பலி; உக்ரைன் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் படுகாயம்

...

arvoshan.com

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறைக்குத் தடை – நியூயோர்க்

...

arvoshan.com

டைட்டானிக்கை விட நீளமான கப்பல் கடலில் மூழ்கடிப்பு! உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாற்றம்

...

arvoshan.com

புரூக்ளின் கட்டட இடிபாடு: உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

...

arvoshan.com

கல்விச் சான்றிதழ் சர்ச்சை: இந்தோனேசிய துணை ஜனாதிபதி பதவி விலகல்

...

arvoshan.com

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா பரவல்: 11 ஆயிரத்தைக் கடந்த தொற்றாளர்கள்; 5,387 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

ரஷ்யா – உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு இணக்கம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் இல்லை

...