தேசிய தொழிற்சங்க மாநாட்டில் நாளை பங்கேற்கிறார் ஜனாதிபதி அநுர
“எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள் வலுவான பயணம்; அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தொழிற்சங்க மாநாடு நாளை (07) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் காலை 9.30 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தனது ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொழிற்சங்கத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.