“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

arvloshan.com

தமிழகத்தில் தவெக ஆட்சி நீடிப்பது மாநிலத்துக்கும், மக்களுக்கும் நல்லதல்ல என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களின் கண்ணீரே இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், சினிமாவில் சக நடிகர்கள் மீது அவதூறு பரப்பி வெற்றி பெற்ற அதே வழியில் ஒருமுறை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் விழா மற்றும் ‘பெரியார் அறிவுலகம்’ அமைத்துத் தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கான பாராட்டு விழா ஆகியவை கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று (நவம்பர் 4) நடைபெற்றன.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் கோவையின் அடையாளமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும், திமுக ஆட்சியில் திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரிலும், சேலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், தற்போதைய ஆட்சியில் எந்தவிதமான காரணங்களும் தெரிவிக்கப்படாமல் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட பணிகள் ரத்து செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

பெரியார் அறிவுலகத்தின் 99 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்ததால் மட்டுமே தற்போதைய அரசு அதனைத் திறந்து வைத்ததாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து தவெக அரசை விமர்சித்த அவர், பவர் சென்டர்கள் இருக்காது எனக் கூறிய முதலமைச்சர் விஜய், தற்போது பின்னணியில் இயங்கும் கார்ப்பரேட் சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். முதலமைச்சரை முன்னிறுத்தி அந்த சக்திகள் நடத்தும் சர்க்கஸ் போலவே தவெக ஆட்சி அமைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இருமடங்கு அதிக விலையில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதை நியாயப்படுத்துவதற்காகவே செயற்கையான மின்வெட்டு உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்துடன், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் தவெக நிர்வாகிகள் அதிகளவில் சிக்குவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், போதைப்பொருள் வழக்கில் தவெக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கும் முதலமைச்சர் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும், திமுக ஆட்சியில் நாட்டிலேயே முன்னிலையில் இருந்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்து மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் தொடர்ந்து நடத்தப்படும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் குறித்து விமர்சித்த அவர், ஆட்சியின் குறைபாடுகளை மறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். இதுபோன்ற சோதனைகளால் திமுக பின்வாங்காது என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், “சினிமாவில் சக நடிகர்கள் மீது அவதூறு பரப்பி வெற்றி பெற்ற அதே வழியில் ஒருமுறை ஜெயித்துவிட்டனர். மக்களின் கண்ணீரே இந்த ஆட்சியை முடித்துவிடும். இந்த ஆட்சி நீடிப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல” எனத் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மூன்று மாதக் குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டிய முதல்வர் விஜய் – நெகிழ்ச்சியில் தாய்

...

arvoshan.com

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

...

arvoshan.com

PUBG விளையாட்டின் தாக்கமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

...

arvoshan.com

இந்தியாவில் கரையைக் கடந்த ‘முரசு’ புயல்; கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை

...

arvoshan.com

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை!

...

arvoshan.com

கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி; கல்லறைகளில் மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி

...

arvoshan.com

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன – ஸ்டாலின் குற்றச்சாட்டு

...

arvoshan.com

புதுக்கோட்டையில் 13,676 பேருக்கு ரூ.62.73 கோடி நலத்திட்ட உதவிகள் – முதல்வர் விஜய் வழங்கினார்

...

arvoshan.com

அம்பாசமுத்திரத்தில் நவம்பர் 14-ல் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி? இடைத்தேர்தலுக்கு தயாராகும் தவெக!

...

arvoshan.com

தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியால் கைதிகள் சிறையிலிருந்து தப்பும் நிலை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் – முதல்வர் விஜய்

...

arvoshan.com

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு – முதல்வர் விஜய் உத்தரவு

...

arvoshan.com

விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

...

arvoshan.com

தமிழ்நாடு சிறையில் வலிப்பு வந்ததாக நாடகமாடி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்!

...

arvoshan.com

சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!

...